மாதங்களில் சிறந் தது மார்கழி; விரதங்களில் சிறந் தது வைகுண்ட ஏகாதசி விரதம்' என்று வைணவம் கூறுகிறது.
எனவே, இந்த பீடுடைய (பெருமையுடைய) மாதமான மார்கழியில் வரும் விரதமென்பதால் வைகுண்ட ஏகாதசி விரதம் சிறந்ததாகப் போற்றப் படுகிறது.
மகத்துவம் கொண்ட வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெறும் சில வைணவத் திருக்கோவில்களைப் பார்ப்போம்.
ஸ்ரீரங்கம்
வைகுண்ட ஏகாதசி வைபவம் ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். "பகல் பத்து' பத்து நாட்களும், திருவாய்மொழித் திருநாள் எனப்படும் "இராப்பத்து' பத்து நாட்களும், வைகுண்ட ஏகாதசி நாளையும் சேர்த்து 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப் பார். அவ்வமயம் பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் அருளிய திருமொழிப்பாசுரங்களைப் பாடுவர். இதனை திருமொழித்திருநாள் என்பர். இதற்கு "அத்யயனோற்சவம்' என்று பெயருண்டு. தமிழ்ப்பாக்களுக்கு விழா எடுத்து தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த ஐதீகத்தை ஏற்படுத்திய பெருமை ராமானுஜரையே சாரும். வைகுண்ட ஏகாதசியன்று இந்த தமிழ்ப்பாசுரங் கள் அபிநயத்துடன் அரையர்களால் இசைக்கப்படும்.
அன்றைய நாளில் மட்டும்தான் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ரத்ன அங்கியுடன் ஜொலிப் பார். இந்த ரத்ன அங்கி மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் ஸ்ரீரங்கனுக்கு காணிக்கையாகச் செலுத் தப்பட்டதாகும்.
திருமலை
திருமலை திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் இல்லையென்றாலும், வைகுண்ட ஏகாதசி யன்று "முக்கோடி பிரதட்சணம்' என்னும் பிராகாரத்திறப்பு வைபவம் நடைபெறுகிறது. திருமலையில் முதலாவது பிராகாரமாக சம்பங்கி பிராகாரமும், இரண்டாவது பிராகாரமாக விமான பிரதட்சணமும், மூன்றாவது "முக்கோடி பிரதட்சணம்' என்ற விசேஷமான பிராகாரமும் உள்ளது. முக்கோடி பிரதட்சண பிராகாரம், வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி தொடங்கி ஏகாதசி, துவாதசி என்று மூன்று நாட்கள் வரை திறந்திருக்கும். இந்த முக்கோடி பிரதட்சணமே "சொர்க்கவாசலுக்கு துவாரம்' என்று சொல்லப்படுகிறது.
பார்த்தசாரதி திருக்கோவில் சென்னை திருவல்லிலிக்கேணி
யில் எழுந்தருளியுள்ள பார்த்தசாரதிப் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியன்று முத்துக்களால் நெய்யப்பட்ட "முத்தங்கி' ஆடை அணிவிக்கப்படுகிறது.
அதன்பின் பத்து நாட்கள் தொடர்ந்து குளிர்கால உடைகள் சாற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. மீசையுடன் காணப்படும் பார்த்தசாரதிப் பெரு மாள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது பகல்பத்து நாட்களில், ஆறாவது நாளிலிருந்து பத்தாம் நாள்வரை ஐந்து நாட்கள் மட்டுமே மீசையில்லாமல் காட்சி தந்து அருள்பாலிப்பது விசேஷமானது.
காஞ்சி அஷ்டபுயகரம் பெருமாள் கோவில்
காஞ்சியில் மட்டும் 14 திவ்யதேசத் திருக் கோவில்கள் உள்ளன என்றாலும் அஷ்ட புயகரம் பெருமாள் ஆலயத்தில் மட்டும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் ராஜகோபுர நுழைவுவாயில் ஒரு திசையிலும், சொர்க்கவாசல் வேறொரு திசையிலும் இருக்கும். பெருமாள் எட்டுக் கரங்களுடன் (அஷ்டபுயம்) காட்சி தரும் இந்த ஆலயத்தில் இரண்டு வாயில்களும் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பாகும்.
திருமெய்யம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது திருமெய்யம் (திருமயம்) திருத்தலம். இத்திருத்தலத்தில் பெருமாள் ஸ்ரீரங்கத்தி லுள்ள பெருமாளைக் காட்டிலும் பெரிய வடிவில் பள்ளிகொண்டபடி காட்சி தருவது சிறப்பானதா கும். இத்திருத்தலப் பெருமாளை சந்நிதி வாசலி லிருந்து முழு உருவமாக தரிசிக்க முடியாது. அங்கே அமைந்துள்ள சாளரங்கள் வழியே தரிசிக்கலாம். ஒரு சாளரம் வழியாக பெருமாளின் திருமுகத்தை யும், மறுசாளரம் வழியே அவரது திருவடிகளையும் தரிசிக்கலாம். பெரும்பாலும் வைணவ ஆலயங்களில் ஏகாதசி திதியை மையமா கக் கொண்டு பரமபத வாசல் திறக்கப்படுவதுண்டு. ஆனால் திருமெய்யத்தில் மட்டும் ஏகாதசி திதியை ஒட்டிவரும் பரணி நட்சத்திரத்தன்று சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்திருக் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடத்தப் படுவதில்லை இதற்குக் காரணம், இத்திருத்தலத்து சாரங்கபாணி பெருமாள் நேரே வைகுண்டத்திலிருந்து இங்கு வந்ததாக ஐதீகம். இத்தல பெருமாளை வணங்கி சேவித்தாலே போதும்; சொர்க்க வாசல் சென்ற பயன் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத் தின் உத்தராயன, தட்சிணாயன வாசலைக் கடந்துசென்றாலே பரமபதமோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். தை மாதம்முதல் ஆனி மாதம்வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி மாதம்முதல் மார்கழி மாதம்வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும்.
அந்தந்த மாதத்திற்கேற்ப ஒரு வாசல் மட்டுமே திறந்திருக்குமாம்.
குருவாயூர்
கேரளாவில் வைகுண்ட ஏகாதசி "விருச்சிக ஏகாதசி' என்ற பெயரில் கொண்டாடப் படுகிறது. குருவாயூரில் பதினெட்டு நாட்கள் வெகுவிமரிசையாக, தீப ஸ்தம்பங்களில் விளக்கு கள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம்போல் அலங்கரித்துக் கொண் டாடுவர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 3.00 மணிமுதல் மறுநாள் துவாதசிவரை கோவில் திறந்தே இருக்கும். வைகுண்ட ஏகாதசியன்று விடியற்காலை குருவாயூரப் பனை தரிசித்தால் "சொர்க்க வாசல்' சென்றுவந்த பலன் கிட்டுமென்பது ஐதீகம்.